TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 28 , 2022 694 days 401 0
  • தேசியக் கனிமவள மேம்பாட்டுக் கழக நிறுவனம் மற்றும் FICCI ஆகியவை இணைந்து இந்தியக் கனிமங்கள் மற்றும் உலோகங்கள் தொழில் துறை குறித்த ஒரு சர்வதேச மாநாட்டினை ஏற்பாடு செய்தன.
    • இந்த மாநாட்டின் கருத்துரு, '2030 ஆம் ஆண்டினை நோக்கிய மாற்றம் & குறிக்கோள் 2047' என்பதாகும்.
  • வரவிருக்கும் 2022 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இடைக் கால தலைமைப் பயிற்சியாளராக V.V.S. லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்தியக் கடற்படை கப்பல் கர்ணாவில் அமைக்கப்பட்டுள்ள, இந்தியாவிலேயே இது போன்ற முதல்-வகையான, ஒரு  ஒருங்கிணைந்த உட்புற ஏவுதல் தளம் (CISR) துணைப் படைத் தளபதி பிஸ்வஜித் தாஸ்குப்தாவால் திறந்து வைக்கப்பட்டது.
    • ஐஎன்ஸ் கர்ணா என்பது இவ்வாறான ஒரு வசதியினைப் பயன்படுத்துவதில் நாட்டின் கடற்படையில் முதலாவதும் நாட்டின் ஒரேயொரு ராணுவ உபகரணமும் ஆகும்.
  • சண்டிகரின் மொஹாலியில் உள்ள முல்லன்பூரில் அமைக்கப்பட்டுள்ள ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தைப் பிரதமர் அவர்கள் திறந்து வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்