TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 29 , 2022 693 days 356 0
  • ஆகஸ்ட் 26 ஆம் தேதியானது சர்வதேச நாய் தினமாக அமெரிக்காவின் விலங்கு நல விரும்பி கொலீன் பைஜ் என்பவரால் நிறுவப் பட்டது.
    • ஒரு மனிதனுக்கும் அவரது நாய்க்கும் இடையே உள்ள ஒரு பிரிக்க முடியாதத் தொடர்பையும், நாய்களைத் தத்தெடுப்பதன் முக்கியத்துவத்தையும் இந்தத் தினம் அங்கீகரிக்கிறது.
  • ஜம்மு காஷ்மீரில் 1000 அடல் மேம்பாட்டு ஆய்வகங்களை நிறுவ நிதி ஆயோக் அமைப்பானது திட்டமிட்டுள்ளது.
    • இது இந்தியாவில் மத்திய அரசின் அடல் புத்தாக்கத் திட்டத்தின் கீழ் ஒரு துணைத் திட்டமாகும்.
  • ரெயில்டெல் மற்றும் க்ளவுட் எக்ஸ்டெல், ஆகியன இரண்டும் இணைந்து தொலைத் தொடர்புப் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் ஒரு நோக்கத்துடன் தொலைத் தொடர்பு வசதிகள் நெருக்கடி மிக்க இடங்களில், இந்தியாவின் முதல் முறையாக பரவலாக்கப் பட்ட ரேடியோ அணுகல் வலையமைப்பு (RAN) வசதியினை அறிமுகப் படுத்த ஒன்றாக கை கோர்த்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்