TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 4 , 2022 687 days 400 0
  • டாட்டா மோட்டார்ஸ் மார்கோபோலோ என்பது டாட்டா மோட்டார்ஸ் (இந்தியா) மற்றும் அதன் பிரேசிலியப் பங்குதார நிறுவனமான மார்கோபோலோ ஆகிய நிறுவனங்களுக்கு இடையேயான ஒரு கூட்டு முயற்சியாகும்.
  • தாதர், தானே மற்றும் மும்பைக் கோட்டத்தின் பிற நிலையங்களில் இந்திய ரயில்வே ‘மேக்தூத்’ என்ற இயந்திரங்களை நிறுவியுள்ளது.
    • தனித்துவமிக்க ‘மேக்தூத்’ இயந்திரங்கள் காற்றில் உள்ள நீராவியைக் குடிநீராக மாற்ற ஒரு புதுமையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.
  • புது தில்லியில் நடைபெற உள்ள 8வது இந்திய சர்வதேச குறு, சிறு  மற்றும் நடுத்தர புத்தொழில் நிறுவனக் கண்காட்சி & உச்சி மாநாட்டினை (2022) துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அவர்கள் அதிகாரப் பூர்வமாகத் திறந்து வைத்தார்.
  • டாடா எஃகு நிறுவனம் மற்றும் பஞ்சாப் அரசாங்கம் ஆகியவை இணைந்து ஆண்டிற்கு 0.75 மில்லியன் டன் என்ற அளவிற்கு எஃகு உற்பத்தியை மேற்கொள்ளும் ஒரு தயாரிப்பு ஆலையை நிறுவ ஒப்புக் கொண்டுள்ளன.
    • டாடா எஃகு நிறுவனம் லூதியானாவின் ஹைடெக் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள கடியானா குர்த் என்ற இடத்தில் பசுமை உற்பத்தி மையத்தினை நிறுவ உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்