கிராமப்புற பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக, இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டத்தைப் போன்று ஏழைகளுக்கு இலவச நாட்டுக்கோழி வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படும் என்று 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிஅறிவித்தார்.
எனது பாரதம், பொன்னான பாரதம் என்ற தலைப்பிலான பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் இளைஞர் பேரணியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் சார்பில் அகில இந்திய அளவிலான இளைஞர் பேரணி கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
அமைதி, தூய்மை, யோகா மூலமாக அறநெறியை பேணி காக்க வேண்டும் என்பனவற்றை வலியுறுத்துவதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும்.
சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரையடுத்து தாம்பரம் அடுத்த ரயில்முனையமாக மாறிக் கொண்டு வருகின்றது. தாம்பரம் ரயில் நிலையத்தின் கிழக்குப் பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய பயணிகள் முனையம் மத்திய ரயில்வேத் துறை இணை அமைச்சர் ராஜேன் கோகெய்னால் நாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தால் ஒப்புதலளிக்கப்பட்டு காவிரி திட்டம் அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, மத்திய அரசு மத்திய நீர்வள ஆணையத் தலைவர் மசூத் உசைன் மற்றும் தலைமைப் பொறியாளர் நவீன் குமார் ஆகியோரை காவிரி நீர் மேலாண்மை அமைப்பின் தலைவராகவும் உறுப்பினராகவும் நியமித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் குமார் காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் தலைவராகவும் பதவி ஏற்றுள்ளார்.
இந்த ஏற்பாடுகள் காவிரித்திட்டத்தின் படி முறையான நியமனங்கள் ஏற்படுத்தப்படும் வரை இடைக்கால நியமனங்களாகும்.
மத்திய அரசாங்கம் ஜம்மு காஷ்மீரில் உள்ளூர் மாநிலத்தின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தும் பொருட்டு ஐந்து இந்திய ரிசர்வ் காவல் படைகளை ஏற்படுத்த முடிவெடுத்துள்ளது. இந்தப் படைப்பிரிவுகள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப் பகுதி மக்களிலிருந்து 60 சதவிகித அளவிற்கு இட ஒதுக்கீடு கொண்டிருக்கும்.