TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 8 , 2022 683 days 359 0
  • புனேவில் உள்ள சக்கான் எனுமிடத்தில் ப்ளூ எனர்ஜி மோட்டார்ஸ் எனும் நிறுவனத்தின் ஆதரவுடன் ஒரு புத்தொழில் நிறுவனமானது இந்தியாவின் முதல் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவினால் இயங்கும் ஒரு பசுமைச் சரக்கு வாகனத்தினை உருவாக்கி உள்ளது.
  • அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, நெட்ஃபிலிக்ஸ் ஊடகத்தின் ஒரு ஆவணப் படமான “Our Great National Parks” என்ற படத்தில் மிக நேர்த்தியான ஒரு விரிவுரை செய்ததற்காக எம்மி விருதை வென்றார்.
  • முதலாவது சர்வதேச ஹோமியோபதி சுகாதார உச்சி மாநாடானது ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நாட்டில் நடத்தப்பட்டது.
  • வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவின் சார்பில் மத்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மங்கோலியா செல்ல உள்ளார்.
    • இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒருவர் மங்கோலியாவுக்குப் பயணம் மேற் கொள்வது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்