TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 10 , 2022 681 days 341 0
  • முன்னாள் இந்தியப் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
    • அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்க வைக்கப்படவில்லை அல்லது ஐபிஎல் 2022 ஆம் ஆண்டு போட்டியின் எந்த அணியாலும் அவர் தேர்ந்தெடுக்கப் படவில்லை.
  • தமிழ்நாடு மெர்க்கண்டைல் ​​வங்கியானது (TMB) அதன் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக கிருஷ்ணன் சங்கர சுப்ரமணியம் என்பவரை நியமித்து உள்ளதாக அறிவித்துள்ளது.
  • தேசிய ஒத்துழைப்புக் கொள்கையை உருவாக்குவதற்காக ஒரு தேசிய அளவிலான குழுவினை நிறுவ உள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
    • முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையிலான இந்தக் குழுவில் நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த 47 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
  • ஈரானின் தெஹ்ரான் நகரில் நடைபெற்ற 14வது ஆசிய 18 வயதிற்குட்பட்டோருக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் கொரியாவை வீழ்த்தி இந்திய ஆண்கள் கைப்பந்து அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
    • இறுதிப் போட்டியில் ஈரானை வீழ்த்தி ஜப்பான் அணி தங்கம் வென்றது.
  • ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய இணை சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் ஆவர்.
    • இது எந்தவொரு இரட்டையர் போட்டியிலும் இந்திய அணி வென்ற இரண்டாவது உலக சாம்பியன்ஷிப் பதக்கமாகும்; இதற்கு முன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா வென்ற முதல் பதக்கம் 2011 ஆம் ஆண்டு மகளிர் இரட்டையர் பிரிவில் ஜுவாலா குட்டா மற்றும் அஷ்வினி பொன்னப்பா ஆகியோர் பெற்ற வெண்கலப் பதக்கம் ஆகும்.
  • சமீபத்தில், சிலியில் நடந்த ஒரு பொது வாக்கெடுப்பானது, அதன் பழைய அரசியல் சாசனத்திற்குப் பதிலாக ஒரு புதிய முற்போக்கான அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்கான ஒரு முன்மொழிவை நிராகரித்தது.
    • ஜெனரல் அகஸ்டோ பினோசேயின் சர்வாதிகாரத்தின் கீழ் எழுதப்பட்ட 1980 ஆம் ஆண்டு சாசனத்திற்குப் பதிலாக ஒரு புதிய வரைவுத் தீர்மானம் வரைவு செய்யப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்