TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 23 , 2022 668 days 367 0
  • நிதி நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டுச் சபையின் (FSDC) 26வது கூட்டமானது மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரத் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
  • லிண்டா ஃப்ருஹ்விர்டோவா சென்னை ஓபன் போட்டியில் தனது முதல் ஹோலாஜிக் WTA போட்டியின் ஒற்றையர் பிரிவுப் போட்டியில் வெற்றி பெற்றுப் பட்டத்தைக் கைப்பற்றினார்.
  • ஸ்ரீநகரில் நிறுவப்பட்டுள்ள காஷ்மீரின் முதலாவது பல திரைகள் கொண்ட ஒற்றை திரையரங்கத்தினை முப்பது ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு ஜம்மு & காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அவர்கள் திறந்து வைத்தார்.
    • இதில் விக்ரம் வேதா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் முதலில் வெளியிடப் படும்
  • இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி (ஓய்வு) அருண் குமார் மிஸ்ரா ஆசியா-பசிபிக் மன்றத்தின் நிர்வாகக் குழுவின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்