TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 25 , 2022 666 days 333 0
  • புற்றுநோயாளிகளின் நலனுக்கானத் தினம் என்றும் அழைக்கப்படும் உலக ரோஜா தினமானது செப்டம்பர் 12 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.
  • மொராக்கோவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான உலகத்  தடகள கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரரான தேவேந்திர ஜஜாரியா வெள்ளிப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
  • மூன்றாவது LEADS சந்திப்பானது, "எதிர்காலத்திற்கானத் தலைமை" என்ற தலைப்பில் புது டெல்லியில் நடத்தப் பட்டது.
  • ஆசிய-பசிபிக் ஒலிபரப்பு மேம்பாட்டு நிறுவனத்திற்கான  இந்தியாவின் தலைமைப்  பதவியாமானது மேலும் ஓர் ஆண்டிற்கு நீட்டிக்கப் பட்டுள்ளது.
  • SAFF மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியில் வங்காளதேச மகளிர் கால்பந்து அணி தனது முதல் பட்டத்தை வென்றது.
    • நேபாளத்தின் காத்மாண்டுவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அந்த அணி நேபாள அணியினை வென்றது.
  • குஜராத்திய மொழித் திரைப்படமான "செல்லோ ஷோ" 95வது அகாடமி விருதுகள் அல்லது ஆஸ்கார் விருதுகளுக்காக இந்தியா சார்பாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  • ஐஎன்எஸ் தர்காஷ் கப்பல் கடற்கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக கினியா வளைகுடாப் பகுதியில் ரோந்துப் பணிக்காக அனுப்பப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்