TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 17 , 2018 2356 days 728 0
  • புதுதில்லியில் ஓய்வூதிய ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (Pension Fund Regulatory and Development Authority-PFRDA) மத்திய தன்னாட்சி அமைப்புகளால் இயக்கப்படும் தேசிய ஓய்வூதிய முறை (National Pension System -NPS) அமல்படுத்துவது மீதான மாநாடு நடத்தப்பட்டது.
  • குழாய் மூலம் விநியோகிக்கப்படும் எரிவாயு வலையமைப்பால் முழுவதும் பிணைக்கப்பட்ட முதல் இந்திய மாநிலமாக குஜராத் மாநிலம் உருவெடுத்துள்ளது. இந்த மேற்கு இந்திய மாநிலம் ஏற்கெனவே தனது நிலப்பரப்பில்31 சதவீதத்தை நகர வாயு விநியோக கட்டமைப்பில் கொண்டிருக்கின்றது.
  • அமெரிக்க சண்டை வீரரான ரோண்டா ரவுசி முதல் பெண் தற்காப்பிற்கான கலப்பு கலை (Mixed Martial Art) சண்டை வீரராக இறுதியான சண்டை சாம்பியன்ஷிப் (Ultimate Fighting Championship) வாழ்த்தங்கரங்கத்தில் (Hall of Fame) இணைக்கப்பட உள்ளார்.
  • மகாராஷ்டிர மாநில அரசும், கனடாவின் க்யூபெக் மாகாணமும் பழங்குடியினர் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, உயிரித் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பொருளாதார மேம்பாட்டை அதிகரிக்க ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
  • இந்திய-வியட்நாம் உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாக மத்திய பாதுகாப்புத் தறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அரசிற்குச் சொந்தமான பாதுகாப்புத் தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனமான பாரத் மின்னணுவியல் நிறுவனத்தின் (Bharat Electronics Ltd-BEL) முதல் பிரிதிநிதி அலுவலகத்தை ஹனோயில் திறந்து வைத்தார்.
  • இருபது மாநிலங்கள் ஆயுஷ்மான் பாரத் தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டி மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளன.
  • அமெரிக்கா AH-64E  அப்பாச்சி  தாக்குதல் ஹெலிகாப்டர்களில் ஆறு ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு விற்க ஒப்புதலளித்துள்ளது. இந்த அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் பலதரப்பு எதிர்சண்டையிடும் ஹெலிகாப்டர்களில் ஒரு மிகச்சிறந்த மேம்பட்ட வகையாகும்.
    • இதன் விற்பனைக்கான ஆதரவு நிறுவனங்களில் முதன்மையான ஒப்பந்தக்காரர்கள் லாக்ஹீட் மார்டின், லாங்போ, ரேதான், ஜெனரல் எலக்ட்ரிக் மற்றும் போயிங் ஆகியவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்