புதுதில்லியில் ஓய்வூதிய ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (Pension Fund Regulatory and Development Authority-PFRDA) மத்திய தன்னாட்சி அமைப்புகளால் இயக்கப்படும் தேசிய ஓய்வூதிய முறை (National Pension System -NPS) அமல்படுத்துவது மீதான மாநாடு நடத்தப்பட்டது.
குழாய் மூலம் விநியோகிக்கப்படும் எரிவாயு வலையமைப்பால் முழுவதும் பிணைக்கப்பட்ட முதல் இந்திய மாநிலமாக குஜராத் மாநிலம் உருவெடுத்துள்ளது. இந்த மேற்கு இந்திய மாநிலம் ஏற்கெனவே தனது நிலப்பரப்பில்31 சதவீதத்தை நகர வாயு விநியோக கட்டமைப்பில் கொண்டிருக்கின்றது.
அமெரிக்க சண்டை வீரரான ரோண்டா ரவுசி முதல் பெண் தற்காப்பிற்கான கலப்பு கலை (Mixed Martial Art) சண்டை வீரராக இறுதியான சண்டை சாம்பியன்ஷிப் (Ultimate Fighting Championship) வாழ்த்தங்கரங்கத்தில் (Hall of Fame) இணைக்கப்பட உள்ளார்.
மகாராஷ்டிர மாநில அரசும், கனடாவின் க்யூபெக் மாகாணமும் பழங்குடியினர் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, உயிரித் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பொருளாதார மேம்பாட்டை அதிகரிக்க ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
இந்திய-வியட்நாம் உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாக மத்திய பாதுகாப்புத் தறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அரசிற்குச் சொந்தமான பாதுகாப்புத் தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனமான பாரத் மின்னணுவியல் நிறுவனத்தின் (Bharat Electronics Ltd-BEL) முதல் பிரிதிநிதி அலுவலகத்தை ஹனோயில் திறந்து வைத்தார்.
இருபது மாநிலங்கள் ஆயுஷ்மான் பாரத் தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டி மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளன.
அமெரிக்கா AH-64E அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களில் ஆறு ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு விற்க ஒப்புதலளித்துள்ளது. இந்த அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் பலதரப்பு எதிர்சண்டையிடும் ஹெலிகாப்டர்களில் ஒரு மிகச்சிறந்த மேம்பட்ட வகையாகும்.
இதன் விற்பனைக்கான ஆதரவு நிறுவனங்களில் முதன்மையான ஒப்பந்தக்காரர்கள் லாக்ஹீட் மார்டின், லாங்போ, ரேதான், ஜெனரல் எலக்ட்ரிக் மற்றும் போயிங் ஆகியவையாகும்.