TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 21 , 2022 608 days 337 0
  • இந்திய வம்சாவளி சீக்கிய தன்னார்வலர் அமர் சிங் என்பவர் 2023 ஆம் ஆண்டுக்கான நியூ சவுத் வேல்ஸ் ஆஸ்திரேலியன் என்ற விருதினைப் பெற்றுள்ளார்.
    • அமர் சிங் 7 ஆண்டுகளுக்கு முன்பு ‘டர்பன்ஸ்4 ஆஸ்திரேலியா’ எனும் நிறுவனத்தை நிறுவினார்.
  • கூகுள் 2022 போட்டிக்கான டூடுலின் வெற்றியாளரை கூகுள் நிறுவனம் அறிவித்தது.
    • கொல்கத்தாவைச் சேர்ந்த ஷ்லோக் முகர்ஜி, ‘இந்தியா ஆன் தி சென்டர் ஸ்டேஜ்’ என்ற ஊக்கமளிக்கும் டூடுலுக்காக இந்தியாவுக்கான வெற்றியாளராக அறிவிக்கப் பட்டுள்ளார்.
  • பாரீஸ் நகரில் உள்ள சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் 18 ஆண்டுகளாக வசித்து வந்த ஈரானிய அகதி மெஹ்ரான் கரிமி நாசேரி அதே விமான நிலையத்தில் காலம் ஆனார்.
    • அவரது கதை 2004 ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் திரைப்படமான "தி டெர்மினல்" ஐ உருவாக்கியது.
  • 41வது இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியானது புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் தொடங்கியது.
    • இந்த ஆண்டு வர்த்தகக் கண்காட்சியின் கருப்பொருள் உள்ளூர்க்கான குரல், உள்ளூர் முதல் உலகம் வரை” என்பதாகும்.
  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக நியூசிலாந்தின் கிரெக் பார்க்லே மேலும் இரண்டு ஆண்டு காலத்திற்கு ஒரு மனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • அமேசான் ஒரு டிரில்லியன் டாலர்கள் சந்தை மதிப்பை இழந்த உலகின் முதல் பொது நிறுவனமாக வரலாற்றில் உள்ளது.
    • இது அதிகரித்து வரும் பணவீக்கம், இறுக்கமான பணவியல் கொள்கைகள் மற்றும் ஏமாற்றமளிக்கும் வருவாய் வரவுகள் ஆகியவற்றின் ஒரு கலவையாகும்.
  • நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த உயர்நீதிமன்றங்களின் அறிக்கையின்படி  பதவியில் உள்ள மற்றும் முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்றவியல் வழக்குகள்  மூன்று ஆண்டுகளில் 21% அதிகரித்து 2018 டிசம்பரில் 4,122 என்ற அளவிலிருந்து 2021 டிசம்பரில் 4,984 ஆக அதிகரித்துள்ளது.
    • பதவியில் உள்ளவர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் மகாராஷ்டிராவில் பதிவு செய்யப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்