பொதுத்துறை வங்கியான விஜயா வங்கி 2017-2018 நிதி ஆண்டிற்கான சிறப்பாக செயலாற்றும் பொதுத்துறை வங்கிக்கான விருதை ஓய்வூதிய ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி மன்றத்திடம் (Pension Fund Regulatory and Development Authority-PFRDA)இருந்து பெற்றிருக்கின்றது. இவ்வங்கி அடல் பென்சன் யோஜனாவின் கீழ் சிறப்பாக செயலாற்றியிருக்கின்றது.
இவ்விருது டில்லியில் நடந்த தேசிய அடல் பென்சன் யோஜனா மாநாட்டில் வழங்கப்பட்டுள்ளது.
1988ம் ஆண்டிற்கான AGMUT பணிப் பிரிவைச் சேர்ந்த ADGP தகுதியில் உள்ளசுந்தரி நந்தா என்ற இந்திய காவல் பணி அதிகாரி புதுச்சேரியின் முதல் பெண் பொது காவல் இயக்குநராகப் (Director General of Police-DGP) பொறுப்பேற்கவுள்ளார்.
கேரள மாநில அரசின் சுற்றுலாத்துறை மேம்பாட்டுத் திட்டமான, உலகம் முழுவதும் உள்ள யோகா நிபுணர்களுக்கு சிறப்பு சுற்றுலாப் பயணமான “யோகா தூதர்கள் சுற்றுலாத் திட்டம்” (Yoga Ambassadors Tour) ஆயுஸ் அமைச்சகத்தின் இணை அமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக்கால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல், மே, மற்றும் ஜூன் முதல் வாரம் ஆகிய காலகட்டங்களில் e-way ரசீதுகளைத் தயாரிப்பதில் குஜராத் முன்னணி மாநிலமாக உருவெடுத்துள்ளது. இந்த மாநிலம் 72 மில்லியன் அளவிற்கு மாநிலத்திற்குள்ளேயும் மாநிலத்திற்கு வெளியிலும் e-way ரசீதுகளைத் தயாரித்துள்ளது. அம்மாநிலத்தை அடுத்த இடங்களில் முறையே மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்திரப் பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்கள் உள்ளன.