இரவிந்திரநாத் தாகூர் அவர்களால் நிறுவப்பட்ட விஸ்வபாரதி பல்கலைக் கழகமானது (Visva-Bharati University-VBU) யோகா கிராம் (yoga gram ) எனும் யோக மையத்தை தன்னுடைய வளாகத்தினுள் அமைக்க உள்ளது.
மாநிலத்தில் தண்ணீர் பாதுகாப்பின் முக்கியத்துவத்தின் மீது 10 லட்சம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, 70,000 மாணவர்களின் ஈடுபாட்டோடு கேரள மாநில எழுத்தறிவு திட்ட ஆணையமானது (Kerala State Literacy Mission Authority) தண்ணீர் கல்வியறிவுப் பிரச்சாரத்தை (Water literacy campaign) துவக்கியுள்ளது.
ஜப்பான் மற்றும் இந்தியாவிற்கிடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு ஆற்றிய பங்களிப்பின் காரணமாக சசகாவா இந்தியா தொழுநோய் அறக்கட்டளையின் (Sasakawa India Leprosy Foundation-SILF) தலைவரான தருண் தாஸ் அவர்களுக்கு பேரரசு ஜப்பான் அலங்கார (Japan Imperial Decoration) கவுரவிப்பு வழங்கப்பட்டுள்ளது.