TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 19 , 2022 580 days 303 0
  • இந்தியாவின் முதல் 5G சேவை மூலம் இயக்கப்படும் வாகன உற்பத்தி மையத்தினை நிறுவுவதற்காக டெக் மஹிந்திரா நிறுவனத்துடன் ஏர்டெல் நிறுவனம் கூட்டாண்மை ஒப்பந்தத்தினை மேற்கொண்டுள்ளது.
  • மகாராஷ்டிராவின் புனேவில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டு 4வது டென்னிஸ் பிரீமியர் லீக் போட்டியில் மும்பை லியோன் ஆர்மி என்ற அணியினை வீழ்த்தி ஹைதராபாத் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளது.
  • ஜம்மு மற்றும் காஷ்மீர், ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கணக்கு அடையாளக் குறியீடு உருவாக்கம் என்ற பிரிவில் முதல் பரிசினையும், தொலைத்தொடர்பு சேவை வழங்கீடு என்ற பிரிவில் 2வது பரிசினையும் பெற்றுள்ளது.
  • அக்னி V எனப்படும் அணு ஆயுதத்தினை ஏந்திச் செல்லும் ஏவுகணையின் இரவு நேரச் சோதனைகளை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
    • இது 5,000 கிமீ வரையிலான தொலைவில் உள்ள இலக்கை மிக அதிக துல்லியத்துடன் தாக்கும் திறன் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்