TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 29 , 2022 570 days 292 0
  • மலேசியாவில் நடைபெற்ற டாப் அரேனா இளையோர் சர்வதேச பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் 9 வயதிற்குட்பட்ட நபர்களுக்கானப் போட்டிப் பிரிவில் அருணாச்சலப் பிரதேசத்தின் கெட்டா சோரா வெற்றி பெற்றார்.
  • இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆனது அரசுத் துறையில் சிறந்த நடைமுறைகளுக்கான சிறந்த தரவுப் பாதுகாப்பு விருதைப் பெற்றுள்ளது.
  • புது டெல்லியில் அமைந்துள்ள இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமையகமானது, தேசிய அளவிலான உயரிய பசுமைக் கட்டிட விருதான 2022 ஆம் ஆண்டிற்கான GRIHA எனப்படும் மகத்தான செயல்திறன் விருதினை வென்றுள்ளது.
  • பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஒரு பிரபல இங்கிலாந்து பத்திரிகையின் சர்வதேச அளவில் எல்லா காலங்களிலும் சிறந்து விளங்கும் 50 நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்தியர் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
  • 2021 ஆம் ஆண்டில் தங்கக் கட்டிகள் கொள்முதல் செய்யும் உலக நாடுகளின் மத்திய வங்கிகளில் தாய்லாந்தின் மத்திய வங்கிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய கொள்முதல் நிறுவனமாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உருவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்