TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 9 , 2023 559 days 369 0
  • ONGC, இந்தியன் ஆயில் நிறுவனம், பவர் கிரிட், NTPC மற்றும் SAIL ஆகிய நிறுவனங்கள் 2021-22 ஆம் ஆண்டில் அதிக இலாபம் ஈட்டும் முன்னணி ஐந்து பொதுத்துறை நிறுவனங்களாக உருவெடுத்துள்ளன.
  • அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் சிறந்து விளங்கியதற்காக பிரபு சந்திர மிஸ்ராவுக்கு அடல் சம்மான் விருது வழங்கப்பட்டுள்ளது.
  • மத்திய ஜல் சக்தி அமைச்சகமானது, 'Water Vision@2047' என்ற கருத்துருவில் தண்ணீர் வளம் குறித்த தேசிய அளவிலான ஒரு மாநாட்டினை போபால் நகரில் ஏற்பாடு செய்து உள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டியினை முன்னிட்டு, ரூர்கேலாவில் அமைக்கப்பட்டுள்ள ‘பிர்சா முண்டா ஹாக்கி மைதானத்தினை’ ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அவர்கள் திறந்து வைத்தார்.
  • முதல் G-20 கூட்டம் ஆனது ஜனவரி 31ஆம் தேதியன்று புதுச்சேரியில் நடைபெறவுள்ளது.
  • பாராளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான சசி தரூர் எழுதிய Ambedkar: A Life என்ற புத்தகமானது சமீபத்தில் நடைபெற்ற கிதாப் கொல்கத்தா என்ற நிகழ்வில் வெளியிடப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்