TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 30 , 2018 2211 days 707 0
  • 15-வது இந்திய-ஆஸ்திரேலிய நாடுகளுக்கிடையேயான கூட்டு அமைச்சர்கள் ஆணையத்தின் கூட்டத் தொடரானது மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளுக்கான மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு மற்றும் ஆஸ்திரேலியாவின் வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீடுகளுக்கான அமைச்சர் ஸ்டீபன் சியோபோ ஆகியோர் தலைமையில் கான்பராவில் நடைபெற்றது.
  • அட்டவணைப் பழங்குடியினருக்கான தேசிய ஆணையமானது (NCST-National Commission for Scheduled Tribes) 2018 ஜூன் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் “அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர்களின் பாதுகாப்பு: முன்னோக்கு வழி” என்னும் தேசியக் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருக்கிறது. இந்தக் கருத்தரங்கு புது தில்லியின் மேக்ஸ் முல்லர் மார்க்கத்தில் இந்திய சர்வதேச மையத்தில் அமைந்துள்ள கமலாதேவி பல்நோக்குக் கூடத்தில் நடைபெறுகிறது.
    • இந்தக் கருத்தரங்கு இந்திய மானுடவியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள 18 பழங்குடி ஆராய்ச்சி நிறுவனங்களின் இயக்குநர்கள் ஆகியோருடன் இணைந்து அட்டவணைப் பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
  • சீனா தனது நாட்டில் பல்வேறு பகுதியில் வாழும் குடிமக்களை கண்காணிப்பதற்காக புகைப்படக் கருவி ஜீ.பி.எஸ் (GPS-Global Positioning System), உணரி மற்றும் செயற்கோள் தொடர்புத் திறன் போன்றவை பொருத்தப்பட்ட பறவை வடிவிலான ஆளில்லா விமானத்தை அறிமுகப்படுத்தியது.
    • இந்தத் திட்டத்தின் குறியீடு பெயர் டோவ் (Dove) ஆகும். இத்திட்டம் சாங் பைவெங் (Song BiFeng) என்னும் வடமேற்கு பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரால் செயல்படுத்தப்படுகிறது.
  • ஈரான் உள்நாட்டுப் பொருட்களைப் பாதுகாக்க மற்றும் நாணய வெளியேற்றத்தைக் கையாளுவதற்காக தடை செய்யப்பட்ட இறக்குமதிப் பொருட்களின் அட்டவணையை அறிவித்தது.
  • மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமானது போஷான் அபியான் (POSHAN Abhiyan) திட்டத்தை சரியான திசையில் செயல்படுத்த தொழில்நுட்ப பங்குரிமைக்கான ‘TECH THON’ எனும் ஒரு நாள் கருத்தரங்கு புதுதில்லியின் பிரவேசி பாரதிய கேந்திராவில் (Pravasi Bharatiya Kendra) ஜூன் 28, 2018-ல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
    • போஷான் அபியான் அல்லது தேசிய ஊட்டச்சத்துத் திட்டமானது முழுமையான ஊட்டச்சத்து அளிக்கக் கூடிய பிரதம அமைச்சர் நரேந்திர மோடியின் முயற்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்