TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 22 , 2023 675 days 409 0
  • எல்லைப் பாதுகாப்புப் படையின் முன்னாள் தலைமை இயக்குநர் பங்கஜ் குமார் சிங் இந்தியாவின் தேசிய துணைப் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்தியாவின் G20 தலைமைத்துவத்தின் கீழான முதல் சுகாதாரப் பணிக்குழுவின் மூன்று நாட்கள் அளவிலான கூட்டமானது திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
  • உலகப் பொருளாதார மன்றம் (WEF) ஆனது சுகாதார மற்றும் உயிர் அறிவியல் ஆகியவற்றினை மையமாகக் கொண்ட நான்காவது தொழில்துறைப் புரட்சிக்கான அதன் சிறப்பு மையத்தை நிறுவுவதற்கு ஹைதராபாத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது.
  • முற்றிலும் மின் ஆளுமை முறைக்கு மாறிய முதல் இந்திய ஒன்றியப் பிரதேசம் ஆக ஜம்மு மற்றும் காஷ்மீர் மாறியுள்ளது.
    • முழுமையாக எண்ணிம மயமாக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் ஒன்றியப் பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஆகும்.
  • ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசாங்கம் ஆனது 2009 ஆம் ஆண்டு விலங்குகள் சட்டத்தின் கீழ், தொற்று மற்றும் கொடிய நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் நோக்கங்களுக்காக முழு ஒன்றியப் பிரதேசத்தையும் "தொற்று அற்ற பகுதி" என்று அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்