TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 27 , 2023 541 days 298 0
  • எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு, ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் மிகப்பெரிய மனித சிவப்பு ரிப்பன் சங்கிலியை உருவாக்குகியது.
  • இன்ஸ்டாகிராம், முகநூல், ட்விட்டர், டிக்டாக் மற்றும் யூடியூப் ஆகியவற்றில் சர்வதேச கிரிக்கெட் கழகம் (ஐசிசி) 92.2 மில்லியன் அளவில் பின்தொடர்பவர்களைப் பெற்றதன் மூலம் சமூக ஊடகங்களில் அதிகம் பின்பற்றப்படும் ஒரு சர்வதேச விளையாட்டுக் கூட்டமைப்பு ஆக மாறியுள்ளது.
  • இந்துஸ்தானி பாடகர் பத்ம விபூஷன் டாக்டர் பிரபா அத்ரேவுக்கு பண்டிட் ஹரிபிரசாத் சௌராசியா வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
  • டாடா அறக்கட்டளையானது, சித்தார்த் சர்மாவை அதன் அறக்கட்டளைகளின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் (CEO) அபர்ணா உப்பலூரியைத் தலைமை இயக்க அதிகாரியாகவும் (COO) நியமித்துள்ளது.
  • பெட்ரோலியம் விளையாட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் (PSPB) லட்சுமண் ராவத் NSCI அகில இந்திய ஸ்னூக்கர் ஓபனில் தனது சக போட்டியாளரான ஆதித்யா மேத்தாவைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
  • எட்டாவது இந்திய சர்வதேச அறிவியல் விழா போபாலில் ‘அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துடன் அம்ரித் கால் என்ற நிகழ்வை நோக்கி அணி வகுத்துச் செல்வது’ என்றத் தலைப்பில் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்