அசாம் மாநில அரசானது, 2023 ஆம் ஆண்டு இளையோர் 20 (Y20) சந்திப்பின் தொடக்கக் கூட்டத்தினை குவஹாத்தி நகரில் நடத்தியது.
குஜராத் அரசானது ரான் ஆஃப் கட்ச் பகுதியில் G20 சுற்றுலாப் பணிக் கட்டுப்பாட்டுக் குழுவின் (TWG) தொடக்கக் கூட்டத்தினை நடத்தியது.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது, G20 அமைப்பிற்கான இந்தியாவின் தலைமையின் கீழ், 400 உள்நாட்டு மற்றும் சர்வதேசப் பங்கேற்பாளர்கள் பங்கு பெற்ற G20 இணையவெளிப் பாதுகாப்புப் பயிற்சியினை மேற்கொண்டது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமானது, இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் (DCGI) தலைவராக டாக்டர் ராஜீவ் சிங் ரகுவன்ஷி என்பவரை நியமிப்பதற்குப் பரிந்துரை செய்துள்ளது.
மத்திய இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோர் மூன்றாவது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளின் சின்னம், கருத்தாக்கப் பாடல் மற்றும் உடை ஆகியவற்றினை வெளியிட்டனர்.
ஒடிசா மாநில முதல்வரின் செயலாளரான V.K. பாண்டியன், ஹாக்கித் துறையில் ஆற்றிய சிறந்தப் பங்களிப்பிற்காக 2023 ஆம் ஆண்டிற்கான FIH பிரசிடென்ஸ் விருது வழங்கி கௌரவிக்கப் பட்டார்.