தெலுங்கானா மாநில அரசானது, இந்தியாவில் உள்ள நிலையானப் போக்குவரத்து அமைப்புகளை மேலும் மேம்படுத்துவதற்காக ஹைதராபாத் மற்றும் அதைச் சுற்றி நான்கு மாபெரும் தொகுப்புகளை அமைப்பதற்கான தெலுங்கானா போக்குவரத்துப் பள்ளத்தாக்குப் பகுதி திட்டத்தினை (TMV) அறிவித்துள்ளது.
இது இந்தியாவின் முதலாவது போக்குவரத்துப் பள்ளத்தாக்குப் பகுதி திட்டமாகும்.
ஜார்க்கண்டில் அமைக்கப்பட உள்ள இந்தியாவின் ஐந்தாவது நுண் யூரியா உற்பத்தி ஆலைக்குச் சமீபத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது.
தேசியக் கடற்கரைத் தளக் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் அதன் தொடக்க சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கேரள அணி வென்றது.
இந்திய அரசாங்கம் தனது 33.44% பங்குகளுடன் Vi (வோடபோன் ஐடியா) நிறுவனத்தின் மிகப்பெரியப் பங்குதாரராக மாற உள்ளது.