போஸ்டான் கன்ஸல்டிங் குரூப் மற்றும்com ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வின்படி, நியூயார்க், பெர்லின் மற்றும் பார்சிலோனா ஆகிய நகரங்களை விட லண்டன் நகரம், உலகில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மிகவும் விரும்பும் நகரமாக உள்ளது.
இதற்கிடையில், நாடுகளுக்கிடையேயான ஆய்வின்படி ஒட்டுமொத்தமாக ஐக்கிய ராஜ்ஜியம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஐக்கிய ராஜ்ஜியம் 2014-ல் இரண்டாவது இடத்தில் இருந்தது.
பெங்களுரூவை அடிப்படையாகக் கொண்ட சுமத்ரா குரூப் என்ற நிறுவனம் மகேந்திரசிங் தோனியைத் தனது முதலாவது நிறுவனத் தூதராக நியமித்துள்ளது. இவர் அந்நிறுவனத்தின் அடையாளமாக அனைத்து தேசியப் பிரச்சாரங்களிலும் பல ஆண்டுகளுக்கு ஈடுபடுவார்.
அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மிச்சிகன் மைக்ரோ மோட் என்ற சிறிய கணினியை வடிவமைத்துள்ளனர். இது3 மி.மீ * 0.3 மி.மீ என்ற அளவிலும் அரிசி தானியத்தை விட முற்றிலும் சிறிய அளவிலும் உள்ளது.
இந்த மிகச்சிறிய சாதனங்களில் ஏற்கெனவே உள்ள நிரலாக்க மற்றும் தரவுகள், இச்சாதனங்கள் அணைந்தவுடன் இவை அனைத்தும் அழிந்துவிடும்.
தமிழ் நாட்டின் சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த இரயில்பெட்டித் தொழிற்சாலையானது முதன் முறையாக துருப்பிடிக்காத எஃகுடன் கூடிய 3 கட்ட ஆற்றல் மிக்க மெய்ன்லைன் எலக்ட்ரிக் மல்டிபில் யூனிட் (MEMV-Mainline Electric multiple unit) கொண்ட 8 இரயில் பெட்டிகளை வடிவமைத்து வெளியிட்டுள்ளது.
MEMU என்பது புறநகர் இரயில் அமைப்பாகும். இது உள்நகரங்களில் குறைந்த தொலைவு பயணம் செய்யும் பயணிகளின் தேவையை நிவர்த்தி செய்கிறது.
இந்திய இரயில்வேயானது, மேற்கு மத்திய இரயில்வே, மத்திய இரயில்வே, கிழக்கு இரயில்வே மற்றும் தென் கிழக்கு மத்திய இரயில்வே ஆகிய நான்கு மண்டலங்களிலும் ஆளில்லா லெவல் கிராஸிங்கை (UMLC – Unmanned level crossing) முற்றிலும் நீக்கியுள்ளது. இந்த நான்கு மண்டலங்களும் 11,545 கிலோ மீட்டர்கள் தொலைவுடன் ஆளில்லா லெவல் கிராஸிங் அற்ற அகல இரயில் பாதையாக உருவெடுத்து உள்ளது.