தற்போதைய பனாமாவுக்கான இந்தியத் தூதராக இருக்கும் ரவி தாப்பர் (IFS : 1983), கோஸ்டாரிக்கா குடியரசின் அடுத்தத் தூதராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையானது, ஜம்மு காஷ்மீர் மக்களுக்காக ‘Madadgaoor Helpline’ என்ற சேவையை துயரத்தில் உள்ளவர்களுக்கு உதவுவதற்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் நோக்கம் உள்ளூர் மக்களுக்கு உடனடியாக உதவுவது ஆகும்.
மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் பிரச்சனைகளைக் களைய மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை அமைத்துள்ளது. இதன் முதல் கூட்டம் புது தில்லியில் மத்திய நீர் ஆணையத்தில் ஜூலை 2-ல் நடைபெற்றது.
இந்தக் கூட்டமானது மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் எஸ்.மசூத் ஹசைன் தலைமையில் நடைபெற்றது. இவர் இந்த வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் நீதிமன்றமான ஹைதராபாத் உயர்நீதிமன்றத்திற்கு நீதியரசர் தோட்டத்தில் பாஸ்கரன் நாயர் ராதாகிருஷ்ணன் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சத்தீஸ்கர் மாநில உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக தற்பொழுது பணியாற்றுகிறார்.
அமெரிக்காவின் ஜனநாயக தேசியக் குழுவின் (Democratic National Committee) தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய-அமெரிக்கர் சீமா நந்தா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனநாயக தேசியக் குழுவானது அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் முடிவெடுக்கும் அமைப்பாகும்.
அமெரிக்காவின் முக்கிய அரசியல் கட்சியின் செயல்பாட்டுத் தலைவராக இந்திய அமெரிக்கர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
சென்னையைத் தலைமையாகக் கொண்டு செயல்படும் யுனிடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் (United India Insurance Company) கே.பி.விஜய் சீனிவாஸ்-ஐ இயக்குநர் மற்றும் பொது மேலாளராக நியமித்துள்ளது. இவர் இப்புதிய பதவியில் நியமிப்படுவதற்கு முன்பு நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனியின் முதன்மை சந்தைப்படுத்தலுக்கான அதிகாரி மற்றும் பொது மேலாளர் பதவியை வகித்தார்.
நாட்டின் முதலாவது ‘காதி மால்’ (Khadi Mall) ஜார்க்கண்ட் மாநிலத்தில் விரைவில் தொடங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சிஎம் ரகுபர் தாஸ் அறிவித்துள்ளார்.
டெல்லி மற்றும் மாவட்டங்களின் கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவருக்கான தேர்தலில் மூத்த பத்திரிக்கையாளர் ராஜாத் சர்மா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட்டர் மதன் லால்-ஐ விட 517 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
வணிக வரி அலுவலகத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (GST - Good and Services Tax) தின கொண்டாட்டத்தின் போது ‘உங்கள் படிகளில் வணிக வரி’ எனும் புதிய திட்டத்தை உத்தரப் பிரதேச மாநில அரசு ஜூலை 1, 2018 அன்று அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31, 2018 வரை செயல்படும்.