மத்திய அரசின் முன்னாள் வர்த்தக செயலாளரும், ஓய்வு பெற்ற அரசு நிர்வாக அதிகாரியான B.V.R.சுப்ரமணியம் அவர்கள் நிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) நியமிக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரில் அமைக்கப்பட உள்ள திவ்யாங் பூங்கா எனப் படும் உலகின் மிகப்பெரிய மற்றும் தனித்துவமான, அனுபூதி என்ற உள்ளார்ந்த அம்சங்கள் கொண்ட ஒரு பூங்காவிற்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார்.
வேதாந்தா மற்றும் ஃபாக்ஸ்கான் ஆகிய நிறுவனங்களுக்கு இடையேயான ஒரு கூட்டு முதலீட்டு நிறுவனமானது இந்தியாவின் முதலாவது குறைகடத்தி மற்றும் திரைச் சாதனத் தயாரிப்பு மையத்தினை குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் அமைக்க உள்ளது.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை அமைச்சர் வீரேந்திர குமார் அவர்கள், மும்பையில் நடைபெற உள்ள 2023 ஆம் ஆண்டு திவ்ய கலா மேளாவினைத் தொடங்கி வைத்தார்.
பிலிப்ஸ் வீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்தி நிறுவனமானது, தனது நிறுவனத்தின் பெயரை வெர்சுனி என மாற்றுவதாக அறிவித்துள்ளது.