ஒடிசாவில் உள்ள பழங்குடியின மொழிகளை மேம்படுத்துவதற்கானப் பணிக்காக இந்தியக் கல்வியாளர் மற்றும் சமூக சேவகர் டாக்டர் மகேந்திர குமார் மிஸ்ரா அவர்களுக்கு, வங்காளதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா அவர்கள் டாக்காவில் நடைபெற்ற விழா ஒன்றில் சர்வதேசத் தாய்மொழி விருதை வழங்கினார்.
இந்த விருதினைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையினை இவர் பெற்று உள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகம் ஆனது அபுதாபியில் நடைபெற உள்ள I2U2 அமைப்பின் முதலாவது துணை அமைச்சர்கள் கூட்டத்தினை நடத்த உள்ளது.
இதில் இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் பங்கேற்க உள்ளன.