இந்தியக் கடற்படையின் கிலோ வகுப்பு வகையினைச் சேர்ந்த, வழக்கமான டீசல் ஜெனெரேட்டர்கள் மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் சிந்துகேசரி, இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் முதல் முறையாக நிறுத்தப்பட்டது.
மும்பையில் உள்ள சர்ச்கேட் இரயில் நிலையமானது, இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் ஆளுநர் 'சிந்தாமன்ராவ் தேஷ்முக்' அவர்களின் நினைவாக விரைவில் பெயர் மாற்றப் பட உள்ளது.
பிரச்சாரம் மற்றும் தணிக்கை ஆகியவற்றினைக் காரணம் காட்டி, சீன அரசானது அந்த நாட்டில் chatGPT என்ற உரையாடு மென்பொருளினை முடக்க முடிவு செய்து உள்ளது.
மொராக்கோவில் நடைபெற்ற FIFA கிளப் உலகக் கோப்பைப் போட்டியில் சவூதி அரேபியாவின் அல் ஹிலால் அணியினை வீழ்த்தி ரியல் மாட்ரிட் அணி இறுதிக் கோப்பையினைக் கைப்பற்றியது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அடித்த தனது முதல் சதத்தின் மூலமாக மூன்று வகைப் போட்டிகளிலும் சதம் அடித்த முதல் இந்திய அணித் தலைவர் மற்றும் உலகின் நான்காவது வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.