TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 2 , 2023 507 days 280 0
  • G20 அமைப்பிற்கான இந்தியாவின் தலைமைத்துவத்தின் ஒரு பகுதியாக, 2023 ஆம் ஆண்டு இளையோர் 20 இந்தியா உச்சி மாநாடானது குஜராத்தில் உள்ள பரோடாவின் மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
  • கர்நாடகாவில் அமைக்கப்பட்டுள்ள சிவமோகா விமான நிலையத்தை பிரதமர் திறந்து வைத்தார்.
    • இது கர்நாடகாவின் 9வது உள்நாட்டு விமான நிலையமாகும்.
  • சிக்கிம் மாநிலம் காங்டாக்கில் நடைபெற்ற காமன்வெல்த் பாராளுமன்றச் சங்கத்தின் இந்தியாவிற்கான 3வது மண்டல மாநாட்டின் 19வது பதிப்பினை மக்களவைச் சபாநாயகர் ஓம் பிர்லா அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • ஆஸ்திரேலிய அணியானது, தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டியின் 8வது பதிப்பில் தென்னாப்பிரிக்க அணியினை வீழ்த்தி ஆறாவது முறையாக உலகக் கோப்பையினை வென்றுள்ளது.
  • பின்லாந்து நாட்டின் நோக்கியா நிறுவனமானது, கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக தனது தயாரிப்பின் அடையாளச் சின்னத்தை மாற்றியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்