மறைமுக வரிக்கான திட்டம் வகுக்கும் உச்சி அமைப்பான மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்திற்கான மத்தியக் குழுவிற்கு (CBIC - Central Board of Indirect Taxes and Customs) தலைவராக மூத்த அதிகாரியான எஸ்.ரமேஷை மத்திய அரசு நியமித்துள்ளது. இவர் மத்திய அரசுக்குச் சிறப்புச் செயலாளர் அந்தஸ்துடன் சிபிஐசி யின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன் சிபிஐசி-ன் தலைவராக வனஜா என் சர்னா பதவி வகித்தார். அவர் சமீபத்தில் ஓய்வு பெற்ற பின் இப்பதவிக்கு எஸ்.ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்பிபீம் (Infibeam) அவின்யூவில் இயக்குநராக இருக்கும் விஸ்வாஸ் பட்டேல் இந்தியாவின் பணம் செலுத்துதல் ஆணையத்தின் (Payments Council of India) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியை வகித்த நவீன் சூர்யா அதன் மதிப்புமிக்க தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
5வது பிராந்திய பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தின் (RCEP - Regional Comprehensive Economic Partnership) அமைச்சர்களுக்கிடையேயான தற்காலிக கூட்டத்தொடர் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்றது. ஆசியான் நாடுகளுக்கு வெளியே நடைபெறும் முதலாவது சந்திப்பு இதுவாகும்.
சிங்கப்பூரின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரான சன் சுன் சிங் மற்றும் அவரது எதிரிணையான ஜப்பானின் ஹிரோசிகி சிகோ ஆகியோர் தலைமையில் இச்சந்திப்பு நடைபெற்றது.
கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களை நிபா வைரஸ் தொற்று நோயற்ற மாவட்டங்களாக கேரளா அரசு அறிவித்துள்ளது. இது அவ்வைரசின் இரட்டை நோயரும்பு காலம் முடிவடையும் வரை நிபா தொற்று நோய் எதுவும் பதிவாகாததால் இந்த இரு மாவட்டங்களும் தற்காலிகமாக நிபா வைரஸ் தொற்று நோயற்ற மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த சாதனையை பிரேசில் அணி நிகழ்த்தியுள்ளது. அந்த அணி இதுவரை விளையாடிய உலகக் கோப்பை போட்டிகளில் 228 கோல்கள் அடித்துள்ளது.
ஜெர்மனி (226), அர்ஜெண்டினா (137), இத்தாலி (128), பிரான்ஸ் (113) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.