TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 11 , 2023 498 days 262 0
  • நாகாலாந்தின் முதல் பெண் அமைச்சராகப் பதவியேற்று சல்ஹூதுவோனுவோ க்ரூஸ் வரலாறு படைத்துள்ளார்.
    • சமீபத்தில் சல்ஹூதுவோனுவோ மற்றும் ஹெகானி ஜகாலு ஆகியோர் அந்த மாநிலத்தின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளனர்.
  • உலகின் மிகப் பெரிய ஒப்பந்த உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கான் குழுமம் ஆனது, கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டில், மின்னணுப் பொருட்கள் உற்பத்தி மற்றும் தொகுப்பு அலகினைப் பெங்களூரு அருகே நிறுவ உள்ளது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தான் நாடானது பெண்கள் மற்றும் சிறுமிகளின் அடிப்படை உரிமைகள் பலவற்றைப் பறித்து 2023 ஆம் ஆண்டில் உலகிலேயே மிக அதிகளவில் அவர்களை அடக்குமுறைக்கு உட்படுத்துகின்ற நாடாக திகழ்கிறது.
  • சவுராஷ்டிரா கிரிக்கெட் அணியானது, வங்காள அணியை வீழ்த்தி, இரண்டாவது முறையாக ரஞ்சிக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.
    • இந்தப் பருவத்தில் முதல் முறையாக சிக்கிம் ரஞ்சிப் போட்டிகளை நடத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்