TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 12 , 2023 497 days 257 0
  • சாவ்லான் நிறுவனமானது, தனது ஸ்வஸ்த் இந்தியா திட்டத்திற்கான உலகின் முதல் ‘கைத் தூய்மைக்கான விளம்பரத் தூதராக’ சச்சின் டெண்டுல்கரை மக்களைக் கை கழுவச் செய்வதை ஊக்குவிக்க நியமித்துள்ளது.
  • 23வது காமன்வெல்த் சட்ட மாநாடு கோவாவில் நடைபெற்றது.
  • இரண்டு நாட்கள் அளவிலான G20 அமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் ஆனது இந்தியாவின் தலைமையில் புது டெல்லியில் நடைபெற்றது.
  • மகளிருக்கான பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் கோப்பைக்கான ஆதரவு வழங்கும் நிறுவனத்திற்கான உரிமையை டாடா குழுமம் பெற்றுள்ளது.
    • ஏற்கனவே, டாடா குழுமம் ஆனது இந்தியன் பிரீமியர் லீக் போட்டியின் உரிமையையும் பெற்றுள்ளது.
  • சமீபத்தில் பஹ்ரைனில் உள்ள மனாமா நகரில் நடைபெற்ற 33வது AFC மாநாட்டின் போது 2027 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பைக் கால்பந்துப் போட்டியினை நடத்தச் செய்வதற்காக சவுதி அரேபியா நாடு தேர்வு செய்யப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்