இந்தியத் தேர்தல் ஆணையம் ஆனது, ‘உள்ளார்ந்தத் தேர்தல்கள் மற்றும் தேர்தல் ஒருமைப்பாடு’ என்ற ஒரு கருத்துருவின் கீழ் தனது 3வது சர்வதேச மாநாட்டினை காணொளி வாயிலாக நடத்தியது.
உச்ச நீதிமன்ற நீதிபதி V. இராமசுப்ரமணியன் அவர்கள் இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் - காந்திய சகாப்தம் (India’s Struggle for Independence – Gandhian Era) என்ற புத்தகத்தினை வெளியிட்டார்.
முதலாவது கடற்படைத் தளபதிகள் மாநாடானது (2023) உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்ட இந்தியாவின் முதல் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் நடைபெற்றது.
இராணுவ உத்திசார்ந்த நிலைகளில் உள்ள முக்கியமான பாதுகாப்புப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கவும், மூத்த அரசாங்க அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளவும் இது ஒரு தளமாக அமையும்.
கர்நாடகாவின் தார்வாட் நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் நிரந்தர வளாகத்தினைப் பிரதமர் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்த வளாகம் ஆனது நாட்டின் முதல் திறன்மிகு மற்றும் பசுமைமிகு இந்தியத் தொழில் நுட்பக் கல்விக் கழக வளாகமாகும்.