இந்தியச் சுரங்க ஆணையரகமானது மார்ச் 01 ஆம் தேதியன்று தனது 75வது ஸ்தாபன தினத்தினைக் கொண்டாடியது.
இது தேசியக் கனிமக் கொள்கை மாநாட்டின் பரிந்துரைகளின் அடிப்படையில் 1948 ஆம் ஆண்டு மார்ச் 01 ஆம் தேதியன்று நிறுவப்பட்டது.
சர்வதேச விமான நிலையச் சபையானது டெல்லி விமான நிலையத்தினை ஆசியப் பசிபிக் பிராந்தியத்தின் தூய்மையான விமான நிலையமாக அறிவித்துள்ளது.
பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக BBC நிறுவனத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை என்ற விருதினை வென்றுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கரண் சிங் எழுதிய ‘Mundaka Upanishad: The Gateway to Eternity’ என்ற புத்தகமானது சமீபத்தில் வெளியானது.
இதே பெயரிலான மற்றொருப் புத்தகமானது 1987 ஆம் ஆண்டில் பாரதிய வித்யா பவன் அமைப்பினால் வெளியிடப்பட்டது.
தாய் மற்றும் தந்தையர் ஆகிய இருவருக்கும் ஒரே மாதிரியான பெற்றோர் விடுப்பு வழங்கிய உலகின் முதல் நாடு ஸ்பெயின் ஆகும்.
16 வாரங்கள் வழங்கப்படும் இந்த விடுப்பானது பரிமாற்ற முடியாதது மற்றும் முழு ஊதியத்துடன் கூடிய ஒரு விடுப்பாகும்.