TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 18 , 2023 619 days 306 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI), இந்தியப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமைக்கு (IREDA) 'உள்கட்டமைப்பு நிதி நிறுவனம்' (IFC) என்ற அந்தஸ்தினை வழங்கி உள்ளது.
  • ஆசியாவின் முதல் பெண் இரயில் எஞ்சின் ஓட்டுநர் ஆன சுரேகா யாதவ், மித அதிவேக வந்தே பாரத் விரைவு இரயிலை இயக்கிய முதல் பெண்மணி என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
  • இந்தியத் தலைமை நீதிபதி D.Y.சந்திரசூட் தலைமையிலான ஒரு அமர்வானது, தன் பாலினத்தவருக்கு இடையேயான திருமணங்களைச் சட்டப் பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரி விண்ணப்பிக்கப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட ஒரு அரசியல் சாசன அமர்விடம் அனுப்பியுள்ளார்.
  • BSE மற்றும் UN Women India ஆகிய அமைப்புகள் இணைந்து மும்பை பங்குச் சந்தையில் (BSE) 'FinEMPOWER' என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளன.
    • இது நிதிப் பாதுகாப்பில் பெண்களின் நிலையை மேம்படுத்துவதற்கான ஓராண்டு அளவிலான ஒரு கூட்டுத் திறன் மேம்பாட்டுத் திட்டமாகும்.
  • நேபாளத்தின் மூன்றாவது குடியரசுத் தலைவராக நேபாளக் காங்கிரசின் மூத்தத் தலைவர் ராம் சந்திர பெளடல் பதவியேற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்