TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 20 , 2023 489 days 270 0
  • சென்னையைச் சேர்ந்த BVK பிரியாணி நிறுவனமானது, இந்தியாவிலேயே முதல் முறையாக 'பணியாட்கள் இல்லாத உணவு பெறும்’ சேவையினைத் தனது கொளத்தூர் கிளையில் அறிமுகப் படுத்தியுள்ளது.
  • தேசியப் பேரிடர் அபாயக் குறைப்புக்கானத் தளத்தின் (NPDRR) 3வது கலந்துரையாடல் ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
  • மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட மத்திய இரயில்வே நிர்வாகமானது, தனது முழு நீள (3,825 கிமீ) அகலப்பாதை வலையமைப்பையும் 100 சதவீதம் மின் மயமாக்கி, தனது செயல்பாட்டில் ஒரு குறிப்பிடத் தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
  • பெங்களூரு நகரில் தேர்தல் செயல்முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காக, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற உறுப்பினர்கள் இணைந்து வாக்களிப்பு விழா 2023 என்ற ஒரு பிரச்சாரத்தினைத் தொடங்கி வைத்தனர்.
  • G20 அமைப்பிற்கான இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் B20 (தொழில்கள்20) மாநாடு ஆனது சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் நடைபெற்றது.
  • ஜியானி இன்ஃபான்டினோ FIFA கூட்டமைப்பின் நான்கு ஆண்டுகாலத் தலைவர் பதவிக்கு மீண்டும் தேர்ந்தெடுக்க ப்பட்டுள்ளார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்