TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 30 , 2023 479 days 267 0
  • உலக வர்த்தக மையச் சங்கம் (WTCA) மற்றும் மெர்லின் குழுமம் ஆகியவை இணைந்து கொல்கத்தா நகரத்தின் சால்ட் லேக் என்னுமிடத்தில் நபாடிகந்தா தொழில்துறை நகர ஆணைய (NDITA) பகுதியில் உலக வர்த்தக மையத்தினை (WTC) நிறுவுவதற்காக கூட்டு சேர்ந்துள்ளது.
    • கிழக்கு இந்தியாவில் கட்டமைக்கப்பட்டு வரும் முதல் உலக வர்த்தக மையம் இது ஆகும்.
  • எல்லைச் சாலைகள் அமைப்பானது உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த லே-மனாலி நெடுஞ்சாலையினை (NH 3) 138 நாட்களில் மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தது.
    • கடந்த ஆண்டு, போக்குவரத்துப் பயன்பாட்டிற்காக இந்த நெடுஞ்சாலையைத் திறப்பதற்கு எல்லைச் சாலைகள் அமைப்பிற்கு 144 நாட்கள் ஆனது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் 2023 ஆம் ஆண்டு தண்ணீர் வள மாநாடானது நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்றது.
    • இதனை தஜிகிஸ்தான் நாட்டு அரசு மற்றும் நெதர்லாந்து இராட்சியம் ஆகியவை இணைந்து நடத்தின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்