TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 31 , 2023 478 days 267 0
  • மும்பை இந்தியன்ஸ் மகளிர் கிரிக்கெட் அணி, மும்பையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியினை வீழ்த்தி முதலாவது மகளிர் கிரிக்கெட் பிரிமியர் லீக் கோப்பையைக் கைப்பற்றியது.
  • புதிய மேம்பாட்டு வங்கியின் தலைவராக பிரேசில் நாட்டின் முன்னாள் அதிபர் டில்மா ரூசெஃப் "ஒருமனதாக" தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
  • ICICI லோம்பார்ட் பொதுக் காப்பீட்டு நிறுவனமானது, சுகாதாரக் காப்பீடு எடுத்த நபர்களுக்காக அத்தொழில்துறை சார்ந்த முதல் அம்சமான 'எந்தவொருப் பகுதியிலும் பணமில்லாச் சேவை' என்ற வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • இது வாடிக்கையாளர்கள் தங்களது காப்பீட்டுப் பட்டியலில் பதிவு செய்யப்படாத மருத்துவமனைகளில் கூட பணமில்லாச் சேவை மூலமான வசதிகளைப் பெற வழி வகை செய்கிறது.
  • ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, G7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்குப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார்.
  • ஜார்க்கண்ட் அரசானது, பணியாள் சேர்ப்பு நிறுவனங்களுக்கும் மாநிலத்தில் உள்ள வேலைவாய்ப்புத் தேடி அலையும் நபர்ர்களுக்கும் இடையிலான ஒரு இடைவெளியைக் குறைப்பதற்காக ஒரு எண்மத் தளமாகச் செயல்படுவதை ஒரு நோக்கமாகக் கொண்ட ‘ஜர்னியோஜன்’ என்ற தளத்தினைத் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்