ஜிண்டால் ஸ்டீல் நிறுவனமானது, தீப்பற்றுதலில் பெரும் எதிர்ப்புத் திறன் கொண்ட எஃகினைத் தயாரிப்பதற்கான இந்தியாவின் முதல் BIS உரிமத்தைப் பெற்றுள்ளது.
கர்நாடக மாநிலம் பிதாரில் அமைந்துள்ள கோரட்டா மைதானத்தில் அமைக்கப் பட்டு உள்ள கோரட்டா தியாகிகள் நினைவகம் மற்றும் சர்தார் வல்லபாய் படேல் நினைவிடம் ஆகியவற்றினை மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்திய இராணுவம் மற்றும் சிங்கப்பூர் இராணுவம் ஆகியவை இடையேயான 'Bold Kurukshetra' என்ற 13வது இருதரப்புப் பயிற்சியானது ராஜஸ்தானில் ஜோத்பூர் இராணுவ மையத்தில் நடைபெற்றது.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது, ஏப்ரல் மாத இறுதிக்குள் செயற்கை நுண்ணறிவு சார்ந்த சூழல் அமைப்புகளுக்கான வரைவுச் செயல் திட்டத்தினை உருவாக்குவதற்காக ஒரு செயற்குழுவை அமைத்துள்ளது.
இந்த IndiaAI இயங்குதளம் ஆனது இந்தியாவின் புத்தொழில் நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றினை ஊக்குவிப்பதில் பெரும் கவனம் செலுத்தும்.
2023 ஆம் ஆண்டு இந்திய உயர்கல்வி தொடர்பான சந்திப்பு ஆனது வங்காளதேசத்தின் டாக்கா நகரில் நடைபெற்றது.
இந்தியாவில் தங்கள் உயர்கல்வியைத் தொடருமாறு உலக நாடுகளின் மாணவர்ச் சமூகத்தினை ஊக்குவித்து அழைப்பு விடுப்பதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
3வது சர்வதேச SME மாநாடு (ISC) ஆனது (2023), சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வானது இந்தியாவின் நான்கு முக்கிய எழுச்சி நிலைத் தொழில் துறைகளான தூய்மையான தொழில்நுட்பம் & பசுமை ஆற்றல், உற்பத்தி, சேவைகள் துறை மற்றும் வேளாண் உணவு பதப்படுத்துதல் & வேளாண் சாதனங்கள் துறை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
மார்ச் 30, 2023 அன்று முதல் முறையாக பூஜ்ஜிய கழிவுகளின் சர்வதேச தினம் அனுசரிக்கப் பட்டது.
இது பூஜ்ஜிய கழிவு மற்றும் பொறுப்பான நுகர்வு மற்றும் உற்பத்தி நடைமுறைகள் மற்றும் நகர்ப்புறக் கழிவு மேலாண்மை ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.