இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் இராணுவத் தலைவர்களின் முதல் கூட்டு மாநாடானது புனேவில் நடைபெறுகிறது.
'2023 ஆம் ஆண்டு இளையோர் மாநாடு’ எனும் நிகழ்வு புது டெல்லியில் உள்ள தேசிய நகர்ப்புற விவகார நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் உள்ள ஆயுர்வேதப் பல்கலைக்கழகத்தின் ரிஷிகுல் வளாகத்தில் ‘கால்நடை மற்றும் ஆயுர்வேதம்’ என்ற ஒரு கருத்துருவின் கீழ் சர்வதேச ஆயுர்வேத மாநாடு நடைபெற்றது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் மற்றும் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய அலுவலகம் ஆகியவை இணைந்து எண்ம சுகாதாரம் குறித்த உலகளாவிய மாநாட்டினை புது டெல்லியில் ஏற்பாடு செய்துள்ளன.
இந்த நிகழ்வின் கருத்துரு 'உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பினைக் கடைநிலை குடிமகனுக்கும் கிடைக்குமாறுச் செய்தல்' என்பதாகும்.