TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 4 , 2023 474 days 260 0
  • வங்காளதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா அவர்கள், காக்ஸ் பசாரில் உள்ள பெகுவாவில் அமைக்கப்பட்டுள்ள ‘‘BNS ஷேக் ஹசீனா’ எனப்படும் அந்த நாட்டின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் தளத்தினைத் திறந்து வைத்தார்.
  • 2023 ஆம் ஆண்டு உலக அரசாங்க உச்சி மாநாடு ஆனது, "எதிர்கால அரசாங்கங்களை வடிவமைத்தல்" என்ற கருத்துருவின் கீழ் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடத்தப் பட்டது.
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின், பகிரப்பட்டப் புத்தப் பாரம்பரியம் பற்றிய முதல் மாநாடானது புது டெல்லியில் நடைபெற்றது.
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளின் பங்கேற்புடன் ‘விளையாட்டு மற்றும் உடல் தகுதி சார்ந்தத் துறையில் ஒத்துழைப்பு’ என்ற தலைப்பிலான மூன்று நாட்கள் அளவிலான உச்சி மாநாடானது புது டெல்லியில் நடைபெற்றது.
  • அமெரிக்காவின் தெற்கு கரோலினாவின் முன்னாள் ஆளுநரும், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதருமான நிக்கி ஹேலி, 2024 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக தனது முன் மொழிதலைக் குடியரசுக் கட்சியின் சார்பாக அளித்துள்ளார்.
  • தொலைதொடர்புத் துறையானது, புது டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ‘முதல் சர்வதேச குவாண்டம் தகவல்தொடர்பு மாநாட்டினை’ ஏற்பாடு செய்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்