TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 5 , 2023 473 days 273 0
  • இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், கேரளாவின் கொச்சியில் உள்ள இந்தியக் கடற்படையின் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சிப் பள்ளியான ஐஎன்எஸ் துரோணாச்சார்யா என்ற பள்ளிக்கு மதிப்புமிக்க பிரஸிடெண்ட் கலர் என்ற விருதினை வழங்கினார்.
    • இது நாட்டிற்கு ஆற்றிய சிறப்பானச் சேவைக்காக ஓர் இராணுவப் பிரிவுக்கு வழங்கப் படும் ஒரு உயரிய கௌரவ விருது ஆகும்.
  • இந்தியத் தொழிலதிபரும், பெரும் புரவலருமான ரத்தன் டாடா, ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியாவின் (AO) பொதுப் பிரிவில் கெளரவ அதிகாரியாக நியமிக்கப் பட்டு உள்ளார்.
  • புத்தொழில் 20 எனப்படுகின்ற புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு ஈடுபாட்டுக் குழுவின் இரண்டாவது சந்திப்பானது, சிக்கிம் மாநிலத்தின் காங்டாக் நகரில் நடைபெற்றது.
  • G20 அமைப்பின் கீழ் நிலையான நிதிச் செயற்குழுவின் (SFWG) 2வது சந்திப்பானது ராஜஸ்தானின் உதய்ப்பூர் நகரில் நடைபெற்றது.
  • ஒரு புதிய பிரபலத் தர மதிப்பீட்டு அறிக்கையின்படி, நடிகர் ரன்வீர் சிங் 2022 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்கப் பிரபலமாக உருவெடுத்துள்ளார்.
    • அவருக்கு அடுத்தபடியாக விராட் கோலி, அக்‌ஷய் குமார், ஆலியா பட், மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்