TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 7 , 2023 471 days 250 0
  • மஹாராஷ்டிராவின் நாக்பூர் மெட்ரோ ரயில் சேவையானது, மூன்று வெவ்வேறு பிரிவுகளுக்காக என்று மதிப்புமிக்க ஆசியா சாதனைப் புத்தகத்தின் சான்றிதழைப் பெற்றுள்ளது.
  • இரண்டு நாட்கள் அளவிலான G20 ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க முன்னெடுப்பு கூட்ட (RIIG) மாநாடானது, அசாமின் திப்ருகர் நகரில் நடைபெற்றது.
    • ஒரு நிலையான மற்றும் சுழல்முறை உயிரிப் பொருளாதாரத்தினை உருவாக்கச் செய்வதற்கான வழிகளைப் பற்றி இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
  • G20 அமைப்பின் முதலாவது தலைமை அறிவியல் ஆலோசகர்கள் வட்டமேசை (G20-CSAR) மாநாடானது உத்தரகாண்ட் மாநிலத்தின் ராம்நகரில் நடைபெற்றது.
    • பல்வேறு நாடுகளின் தலைமை அறிவியல் ஆலோசகர்கள், G20 அமைப்பின் தளத்தில் வட்டமேசை மாநாட்டிற்காக ஒன்று கூடுவது இதுவே முதல் முறையாகும்.
  • ஒரு முக்கியச் சமூகவியலாளரான அலியா மிர் என்பவருக்கு, வளங்காப்பில் அவர் ஆற்றிய மகத்தான முயற்சிகளுக்காக வேண்டி ஜம்மு மற்றும் காஷ்மீர் ஒன்றியப் பிரதேச நிர்வாகமானது வனவிலங்கு வளங்காப்பு விருதினை வழங்கியுள்ளது.
    • வைல்டுலைஃப் SOS என்ற அமைப்பிற்காகப் பணி புரியும் ஜம்மு மற்றும் காஷ்மீரினைச் சேர்ந்த முதல் பெண்மணியும், அந்தப் பகுதியிலிருந்து இந்த விருதினைப் பெற்ற முதல் பெண்மணியும் இவரே ஆவார்.
  • சார்க் நாடுகளின் எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய அறக்கட்டளை (FOSWAL) ஆனது, பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்கு சிறப்பு இலக்கிய விருதினை வழங்கியுள்ளது.
    • அவரது The Unfinished Memoirs, The Prison Diaries and the New China 1952 ஆகிய மூன்று நாடகத் தொகுப்புகளுக்காக இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்