TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 8 , 2023 470 days 233 0
  • G20 அமைப்பின் வர்த்தகம் மற்றும் முதலீட்டுப் பணிக் கட்டுப்பாட்டுக் குழுவின் (TIWG) முதலாவது கூட்டமானது மும்பை நகரில் நடைபெற்றது.
  • G20 அமைப்பிற்கான இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழான பேரிடர் குறைப்புப் பணிக் கட்டுப்பாட்டுக் குழுவின் (DRRWG) முதல் கூட்டமானது குஜராத்தின் காந்தி நகரில் நடைபெற்றது.
  • G20 அமைப்பிற்கான இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழான G20 அரசப் பிரதிநிதிகளின் இரண்டாவது கூட்டமானது, G20 அமைப்பிற்கான இந்தியாவின் அரசப் பிரதிநிதி அமிதாப் காந்த் தலைமையில் கேரளாவின் குமரகோம் நகரில் நடைபெற்றது.
  • G20 அமைப்பிற்கான இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழான இரண்டு நாட்கள் அளவிலான அறிவியல்-20 மாநாடானது திரிபுராவின் அகர்தலா நகரில் உள்ள ஹபானியா சர்வதேசக் கண்காட்சி மைதானத்தில் நடைபெற்றது.
  • சுவிட்சர்லாந்தின் பாசல் நகரில் நடைபெற்ற சுவிஸ் ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் இரட்டையர் பிரிவு போட்டியில், இந்திய நாட்டினைச் சேர்ந்த முன்னணி ஆடவர் இரட்டையர் பிரிவு இணையான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் பட்டத்தினை வென்றனர்.
  • இந்தியப் பளுதூக்கும் வீரர்களான தனுஷ் லோகநாதன் மற்றும் ஜியோஷ்னா சபர் ஆகியோர் அல்பேனியாவில் நடந்த IWF உலக இளையோர் சாம்பியன்ஷிப் போட்டியில் அவரவர் போட்டிப் பிரிவுகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்