தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (Telecom Regulatory Authority of India - TRAI) தலைவராக ராம் சேவாக் சர்மா- ஐ ஆகஸ்ட் 2018 க்கு பிறகும் செப்டம்பர் 2020 வரை (அவர் 65வது வயதை அடையும் வரை) மறுநியமனம் செய்ய அமைச்சரவை நியமனக்குழு (Appointments Committee of the Cabinet) ஒப்புதல் அளித்துள்ளது.
ஹாங்காங் மற்றும் ஷாங்காய் வங்கி நிறுவனம் (Hong Kong and Shanghai Banking Corporation) முதலீட்டாளர்களின் கருத்துகள், சுய விவரங்கள், பயனர் ஆணைகள் மற்றும் ஒப்பந்த விலை போன்ற தகவல்களை நேரடியாக அணுகுவதன் மூலம் மூலதனச் சந்தையினூடாக மூலதனத்தை உயர்த்துவதை எளிதாக்க ஒரு புதிய டிஜிட்டல் தளமான ‘மை டீல்‘ ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகளாவிய புத்தாக்க பட்டியல் (Global Innovation Index) 2018 புதுடெல்லியில் தொடங்கப்பட்டது. இந்நிகழ்வானது GII-ன் நிறுவன பங்குதாரரான இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (CII)-ஆல் உலக அறிவுசார் சொத்து நிறுவனம் (WIPO) மற்றும் இந்திய தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உலகளாவிய புத்தாக்க பட்டியலில் 2017ல் இருந்த 60ம் இடத்திலிருந்து 2018ல் 57வது இடத்திற்கு இந்தியா உயர்ந்துள்ளது.
புதுடெல்லியில் 3வது இந்திய நேபாள ஒருங்கிணைப்பு கூட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் இரு நாடுகளின் எல்லைப் பாதுகாப்பு படைகளுக்கு (Border Guarding Forces) இடையேயான பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை அதிகரிப்பதேயாகும்.
ஆசியான்-வடகிழக்கு மாநிலங்களுக்கிடையேயான உறவை வலுப்படுத்த 5வது ’கிழக்கு செயற்பாடு வணிக காட்சி’ ஒன்றை மேகாலயா நடத்தியது. இந்நிகழ்ச்சியினை இந்திய வர்த்தக சங்கமும் வடகிழக்கு பிராந்திய அபிவிருத்தி அமைச்சகமும் (MDoNER) கூட்டாக ஏற்பாடு செய்திருந்தன.