இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குநராக நீரஜ் நிகாம் என்பவர் நியமிக்கப் பட்டுள்ளார்.
அஞ்சலி ஷர்மா இந்தியப் பாரம்பரிய காதி ஆடையை (லுவான்சாடி) அணிந்தவாறு, தென்னாப்பிரிக்காவில் உள்ள கிளிமஞ்சாரோ மலைச் சிகரத்தின் மீது ஏறி சாதனைப் படைத்துள்ளார்.
கான்பூரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது, இந்தியாவின் தலைமையின் கீழ் G20 அமைப்பிற்கான இளையோர்-20 ஆலோசனை மன்றத்தினை நடத்தியது.
இரவலரும் கலைப் பொருட்கள் சேகரிப்பாளருமான கிரண் நாடார், சமீபத்தில் பிரான்சு நாட்டின் "செவாலியர் டி லா லெஜன் டி'ஹானர்" (நைட் ஆஃப் தி லெஜன் ஆஃப் ஹானர்) என்ற விருதினைப் பெற்றுள்ளார்.