TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 12 , 2023 466 days 241 0
  • கிம் காட்டன், சர்வதேச கிரிக்கெட் கழகத்தின் முழு அளவிலான இரண்டு உறுப்பினர் நாடுகளின் அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஆடவர் போட்டியில் கள நடுவராகப் பணியாற்றிய முதல் பெண்மணி என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
    • இதற்கு முன்னதாக, கிம் 54 மகளிர் டி20 மற்றும் 24 மகளிர் ஒருநாள் போட்டிகளில் கள அளவிலான மற்றும் தொலைக்காட்சி நடுவராகப் பணியாற்றியுள்ளார்.
  • மனித - வனவிலங்கு மோதல் மற்றும் சகவாழ்வு குறித்த சர்வதேச மாநாடு ஆனது, ஐக்கியப் பேரரசின் ஆக்ஸ்போர்டு நகரில் நடைபெற்றது.
  • ஸ்காட்லாந்து நாடாளுமன்றம் ஆனது, ஹம்சா யூசுப்பை தனது முதல் அமைச்சராக நியமித்தது.
    • அவர் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஓர் அரசாங்கத்தில் இடம் பெறுகின்ற இளம் மற்றும் முதலாவது முஸ்லீம் தலைவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்