சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்குக் குடியரசுத் தலைவர் உரிய வழிமுறைகளை பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் இது குறித்து மத்திய அரசை வலியுறுத்தும் வகையிலான ஒரு தீர்மானமும் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
வேலூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய விமான ஓடுதளத்தில் நவம்பர் மாதம் முதல் சிறிய விமானங்களை இயக்க இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்து உள்ளது.
2023 ஆம் ஆண்டின் 5வது சர்வதேச மீள்தன்மை கொண்ட பேரிடர் உள்கட்டமைப்பு குறித்த மாநாடு புது தில்லியில் நடத்தப் பட்டது.