இடஞ்சார்ந்த பேரிடர் எச்சரிக்கைகள், இடி, மின்னல், மழை மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு பற்றியத் தகவல்களைப் பொதுமக்களுக்கு வழங்கும் வகையிலான TN-Alert என்ற கைபேசிச் செயலியினைத் தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
MF ஹைட்ரா எனப்படும் மின்கலங்கள் மற்றும் திரவ ஹைட்ரஜன் எரிபொருள் கலங்களைப் பயன்படுத்துகின்ற கலப்பினத் தொழில்நுட்பம் அடிப்படையிலான ஒரு கப்பலானது, சமீபத்தில் நார்வேயில் தனது இரண்டு வார அளவிலான கடல் பயணச் சோதனைகளை நிறைவு செய்தது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் உகாண்டாவின் கம்பாலாவிற்கு மேற்கொண்ட பயணத்தின் போது 'துளசி கணவாய் பகுதி மறுசீரமைப்பு' எனும் ஒரு திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
ரக்கூன் ஸ்டீலர் எனப்படும் மின்னஞ்சல் மூலமாக தகவலைத் திருடும் ஒரு தீம் பொருளானது எட்டு மத்திய அரசு நிறுவனங்களைத் தாக்கச் செய்வதை இலக்காக கொண்டது.
இது பாதிக்கப்பட்ட கணினிகளிலிருந்து முக்கியமான பல தகவல் தரவுகளைத் திருடும் ஒரு தீம்பொருள் ஆகும்.