TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 17 , 2023 461 days 227 0
  • சென்னையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு ‘கலைஞர் நூற்றாண்டுப் பேருந்து நிலையம்’ என்று பெயர் சூட்டப்பட உள்ளது.
  • அசாமில் கௌகாத்திக்கு அருகிலுள்ள சாங்சாரி என்னுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள, வடகிழக்கு இந்தியாவின் முதல் அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் (எய்ம்ஸ்) ஆனது சமீபத்தில் திறக்கப்பட்டது.
  • இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் D. குகேஷ், உலக சதுரங்க ஆர்மகெடான் ஆசியா & ஓஷானியா போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
  • அஜ்மீர் மற்றும் டெல்லி கன்டோன்மென்ட் இடையே இயக்கப்படும் ராஜஸ்தானின் முதல் வந்தே பாரத் விரைவு இரயில் சேவையானது சமீபத்தில் தொடங்கப்பட்டது.
  • ஐதராபாத்தில் அமைக்கப் பட்டுள்ள B. R. அம்பேத்கர் அவர்களின் 125 அடி உயரம் கொண்ட  வெண்கலச் சிலையைத் தெலுங்கானா முதல்வர் திறந்து வைத்தார்.
    • இது இந்தியாவில் அம்பேத்கரின் மிகவும் உயரமான சிலையாகும்.
  • பாரத் பயோடெக் நிறுவனமானது, அமெரிக்காவின் வாசிங்டன்னில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு உலகத் தடுப்பூசி மாநாட்டில் சிறந்தத் தடுப்பூசி தொழில்துறை (ViE) விருதுகளின் ஒரு பகுதியாக `சிறந்த உற்பத்தி / செயல்முறை மேம்பாடு’ என்ற பிரிவில் விருதினை வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்