TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 18 , 2023 460 days 228 0
  • உச்ச நீதிமன்றத்தில் கண்ணியமிகுப் பணிச்சூழல் நிலவுவதை உறுதி செய்வதற்காக, அந்த வளாகத்திற்குள் உள்ள LGBTQIA+ சமூகத்திற்கு ஏற்ற வகையிலான உள்ளார்ந்த உள்கட்டமைப்பு மற்றும் பாலின உணர்வுகள் சார்ந்த விழிப்புணர்வினை ஏற்படுத்தச் செய்வதற்கான நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் தொடங்கியுள்ளது.
    • மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி பாலின உணர்வுகள் சார்ந்த விழிப்புணர்வு மற்றும் உள்ளரங்கப் புகார்க் குழுவின் ஒரு உறுப்பினராகச் சேர்க்கப் பட்டுள்ளார்.
  • மத்திய ஆயுதக் காவல் படையின் (CAPF) காவலர் பணிக்கான தேர்வுகள் 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
    • இந்தத் தேர்விற்கான வினாத்தாள் ஆனது அசாமி, வங்காளம், குஜராத்தி, மராத்தி, மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்பூரி மற்றும் கொங்கணி ஆகிய மொழிகளில் அமைக்கப்படும்.
  • G20 நாடுகளின் தலைமை வேளாண் அறிவியலாளர்களின் (MACS) ஒரு கூட்டமானது, வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையினால் வாரணாசியில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
  • உலக குரல் தினம் என்பது நமது அன்றாட வாழ்வில் குரலின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காக என்று ஆண்டுதோறும் ஏப்ரல் 16 ஆம் தேதி அன்று அனுசரிக்கப் படும் ஒரு நிகழ்வாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்