TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 9 , 2018 2334 days 747 0
  • நேபாளத்தில் தனது 25 ஆண்டு காலப் பணியை நேபாள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா லிமிடெட் நிறைவு செய்துள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் துணை நிறுவனமாக 1993-ல் நேபாள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா லிமிடெட் தொடங்கப்பட்டது.
  • இந்தியாவின் கண் கூட்டினுள் உட்பொருத்துதல் மற்றும் சிதைத்தலுக்கான சமூகத்தின் கருத்தரங்கு (Conference of Intra-ocular Implant & Refractive Society of India) சென்னையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் துணைக் குடியரசுத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு உரையாற்றினார்.
  • மத்திய உள்துறைக்கான இணை அமைச்சர் ஸ்ரீஹன்ஸ்ராஜ் கங்காராம் டெல்லி போலீசின் முதலாவது இணைய தடயவியல் கூண்டுந்து (VAN) மற்றும் நேரடியான (ஆன்லைன்) இணையவழிக் குற்றங்களுக்கான இணையவாயிலை தொடங்கி வைத்தார். இணைய வழி தொடர்பான குற்றங்களுக்கு மக்கள் நேரடியாகப் புகார் அளிக்கலாம்.
  • மின்னணு வர்த்தகத்தின் மீதான தேசியக் கொள்கைக்கு உத்திகளை வரையறுக்க அமைக்கப்பட்ட செயலாக்கக் குழுவின் முதல் கூட்டத்திற்கு வர்த்தகத் துறை செயலாளர் ரீட்டா டியோட்டியா தலைமை வகித்தார்.
  • சம்பல்பூர் பிரிவில் அதிக அளவிலான மட்டுப்படுத்தப்பட்ட உயரம் கொண்ட 6 சுரங்கப் பாதைகளை கிழக்குக் கடற்கரை இரயில்வே நிறுவியது. நான்கரை மணி நேரத்தில் ஒரே கட்டத்தில் இப்பணியை அந்த ரயில்வே நிறைவு செய்துள்ளது.
    • இந்த வகையானது கிழக்கு கடற்கரை இரயில்வேயின் முதலாவது மட்டுமல்ல, இந்திய இரயில்வேக்கும் முதன்மையானதாகும்.
  • சட்ட ஆணையமானது “சட்ட வரைமுறை : இந்தியாவில் கிரிக்கெட் உள்பட்ட விளையாட்டுகளில் பந்தயம் மற்றும் சூதாட்டம்” என்ற அறிக்கையில், நேரடி மற்றும் மறைமுக வரிவிதிகளுக்கு உட்பட்டு, கிரிக்கெட் உள்பட்ட விளையாட்டுகளின் மேல் பந்தயம் கட்டுவது ஆகியவை ஒழுங்குப்படுத்தப்பட்டு அனுமதிக்கப்படலாம் என்று பரிந்துரைத்துள்ளது. இதை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்க இது ஒரு ஆதாரமாகப் பயன்படும்.
  • சச்சின் டெண்டுல்கர் (664) மற்றும் ராகுல் டிராவிட் (509) ஆகியோருக்கு அடுத்து 500 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெற்ற இந்திய வீரர் என்ற மைல்கல்லை மகேந்திர சிங் தோனி எட்டியுள்ளார். இச்சாதனையை இங்கிலாந்துக்கு எதிரான 2 வது T20 சர்வதேச போட்டியின் போது அவர் நிகழ்த்தினார்.
  • ஜார்க்கண்டின் ராஞ்சியில் இரும்பு அல்லாத கனிம மற்றும் உலோகங்கள் 2018-க்கான சர்வதேச கருத்தரங்கு நிறைவு பெற்றது.
  • முத்தூட் பப்பாச்சான் குழுமம் நடிகை வித்யா பாலனை இரண்டு வருடங்களுக்கு தனது நிறுவனத்தின் அடையாளத் தூதுவராக நியமித்துள்ளது.
  • ‘Train 18’ என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மிதமான அதி-விரைவு இரயில் ‘Train 2018’ ஆனது செப்டம்பரில் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • மேக் இன் இந்தியாவை ஊக்குவிப்பதற்காக சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த இரயில் பெட்டித் தொழிற்சாலையால் இது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இரயிலானது மணிக்கு 160 கி.மீ. வேகம் வரை செல்லும் திறனுடையது.
  • ரிலையன்ஸ் தொழிற்சாலையின் பங்குதாரர்கள் முகேஷ் அம்பானியை அடுத்த 5 ஆண்டுகளுக்கு தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நீடிக்க ஒப்புதல் அளித்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்